/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எங்களுக்கு கூடுதல் விருது கிடையாதா கால்நடை பராமரிப்புத்துறை எதிர்பார்ப்பு

ADDED : ஆக 15, 2024 04:43 AM
மதுரை : மற்ற துறைகளைப் போல குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழாவில் கூடுதல் விருதுகள் வழங்க வேண்டுமென கால்நடை பராமரிப்புத் துறை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தினர் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம் பிற துறைகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை கால்நடை பராமரிப்பு துறைக்கு வழங்குவதில்லை. போலீஸ், சுகாதாரம், வருவாய்த்துறை என ஒவ்வொரு துறைகளிலும் 50க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தின விழாவில் போலீஸ் துறையில் 77, உள்ளாட்சித் துறையில் 33 பேருக்கு விருது வழங்கிய நிலையில் எங்கள் துறையில் 4 பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களது உழைப்பு மிகப்பெரியது. தவிர கிராமம்தோறும் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதால் எங்கள் துறைக்கும் கூடுதல் விருதுகள் வழங்க வேண்டும். தகுதியான சீனியர்களை தேர்ந்தெடுத்து விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றனர்.