/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கற்பனை உலகத்தில் அண்ணாமலை முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கு
/
கற்பனை உலகத்தில் அண்ணாமலை முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கு
கற்பனை உலகத்தில் அண்ணாமலை முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கு
கற்பனை உலகத்தில் அண்ணாமலை முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கு
ADDED : ஆக 15, 2024 05:08 AM
சோழவந்தான், : 'பா.ஜ., தலைவராக வந்த பின் தமிழகத்திற்காக வாதாடி, போராடி நிதியை பெற்று தந்துள்ளேன் என்று பட்டியலை வெளியிட அண்ணாமலை தயாரா. அவர் கற்பனை உலகத்தில் வாழ்ந்து வருகிறார்' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
சோழவந்தானில் அ.தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா ஒன்றிய செயலாளர் கணேசன், பேரூர் செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார். அவர் கூறியதாவது: கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கிய திட்டங்களை எல்லாம் ரத்து செய்து வருகிறார்கள். ஸ்டாலின் ராஜ்யத்தில் மக்களுக்கு பூஜ்யம் தான் கிடைக்கிறது. கருணாநிதி பெயரை நிலை நிறுத்த மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
பா.ஜ., கீழே அ.தி.மு.க கூட்டணி ஆட்சி என மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார். இவர்தான் அ.தி.மு.க., இருக்கக் கூடாது என்று சொன்னார். அவரது தாத்தா வந்தாலும் அ.தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது. முதல்வர் பதவிக்கு அண்ணாமலை ஆசைப்படுகிறார். அது பகல் கனவு. தமிழகத்திற்கு ஒரு பைசா கூட பெற்றுத்தர யோக்கியதை இல்லை. ஆனால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். மக்களை புறக்கணித்து கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அரசியலில் பக்குவம், அனுபவம் வேண்டும். தமிழகத்திற்காக வாதாடி போராடி நிதியை பெற்று தந்துள்ளேன் என்று பட்டியலை அண்ணாமலை வெளியிட தயாரா என சவால் விடுகிறேன் என்றார்.