/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆடு திருட்டு வழக்கு; முன்ஜாமின் தள்ளுபடி
/
ஆடு திருட்டு வழக்கு; முன்ஜாமின் தள்ளுபடி
ADDED : மார் 14, 2025 11:34 PM
மதுரை : மதுரை மாவட்டம் மேலுார் அருகே தும்பைப்பட்டி ராசு. இவரது வீட்டின் அருகே 40 செம்மறி ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். 2 ஆடுகள் திருடுபோயின.
மேலுார் போலீசார் வழக்கு பதிந்தனர். தும்பைப்பட்டி பார்த்திபன், அய்யனார்,'சம்பவத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. வேறொரு நபரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.
முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி ஆர்.சக்திவேல், 'மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார். விசாரணையின்போது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த மனுதாரர்கள் இருவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அவர்களை கைது செய்ய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி வாய்மொழியாக அறிவுறுத்தினார்.
இருவரையும் போலீசார் கைது செய்தனர்.