ADDED : ஜூன் 08, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில்அரசு பள்ளி, கள்ளர் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா உசிலை சிந்தனைப் பேரவை சார்பில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வரவேற்றார். பொதுப்பணித்துறை (கொதிகலன்கள்) மூத்த உதவி இயக்குநர் மகேஷ்பாண்டி, லயன்ஸ் கிளப் முன்னாள் கவர்னர் அறிவழகன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் செல்வம், தேவன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
