ADDED : ஏப் 16, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவையொட்டி ஏப்., 23 காலை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.
அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் மே 11 வேலை நாளாக ஈடு செய்யப்படும். ஏப்.,23ல் கருவூலம், சார்நிலை கருவூலங்கள், வங்கிகள் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

