/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாளைக்கு இறந்து போக போகிறோமா இன்று சுடுகாட்டில் படுத்துக் கிடக்க... பா.ஜ., கூட்டணி குறித்து செல்லுார் ராஜூ தத்துவம்

ADDED : மார் 07, 2025 06:53 AM
மதுரை : ''பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து கால சூழ்நிலைக்கு ஏற்ப பழனிசாமி முடிவெடுப்பார். நாளைக்கு இறந்து போக போகிறோமா. இன்று சுடுகாட்டில் படுத்துக் கிடக்க'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தி.மு.க., எத்தனை கட்சியோடு கூட்டணி வைத்தாலும் மக்கள் ஓட்டளிக்க தயாராக இல்லை. மக்கள் எப்போதும் கருணாநிதியா, ஜெயலலிதாவா என்று பார்த்தார்கள். இப்போது பழனிசாமியா, ஸ்டாலினா என பார்க்கிறார்கள். அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் தி.மு.க., அரசுக்கு எதிராக உள்ளார்கள். 2026 தேர்தலில் ஸ்டாலினை தி.மு.க., குடும்பத்தை தவிர மற்றவர்கள் ஏற்க தயாராக இல்லை.
ஏனெனில் தி.மு.க., குடும்பம்தான் எல்லாமே அனுபவிக்கிறது. அவர்கள் குடும்பம் 'பவர் பாலிடிக்ஸ்' ஆக உள்ளது. கட்சியில் கனிமொழிக்கு முக்கியத்துவம் இல்லை. நிகழ்ச்சிகளில் பூஜை போடும் போது மட்டும் அழைக்கிறார்களே தவிர அவரை கண்டுகொள்ளவில்லை.
எந்த வாக்குறுதி கொடுத்தாலும் எம்.ஜி.ஆர்., போல் பழனிசாமி நிறைவேற்றுவார். அதற்கு உதாரணம் பா.ம.க., தலைவர் அன்புமணி. அவர் ராஜ்யசபா எம்.பி.,யானதற்கு காரணம் பழனிசாமிதான். ஆனால் வெற்றி பெற்றவுடன் எங்களை மறந்துவிட்டார். எங்கள் தோழமை கட்சிகளை எப்படி அரவணைப்பது என்று பழனிசாமிக்கு தெரியும்.
மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி மட்டுமல்ல பிரம்மா வந்தாலும் இது அ.தி.மு.க., கோட்டை. மூர்த்திக்கு பயந்து போவதற்கு நான் ஒன்றும் கோழை இல்லை. நான் மக்களோடு மக்களாக இருப்பவன். அவரை அவரது கிழக்கு தொகுதியை தக்க வைக்க சொல்லுங்கள்.
சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து கால சூழ்நிலைக்கு ஏற்ப பழனிசாமி முடிவெடுப்பார். நாளைக்கு இறந்து போக போகிறோமா. இன்று சுடுகாட்டில் படுத்துக் கிடக்க. இவ்வாறு கூறினார்.