ADDED : மார் 12, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்; மதுரை திருநகர் 7வது பஸ் ஸ்டாப்பில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் திருநெல்வேலி சுடலைமுத்து, அவரது உறவினர் விஜி ஆகியோர் 2004ல் நகை பறித்தனர்.
இந்த வழக்கில் விஜி கைது செய்யப்பட்டார். சுடலை முத்துவை போலீசார் தேடி வந்தனர். துாத்துக்குடி தாதன்குளத்தில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. திருநகர் இன்ஸ்பெக்டர் சித்ரா, எஸ்.ஐ. க்கள் பேரரசி, பாண்டி, போலீசார் முருகன், ராஜராஜன் அடங்கிய தனிப்படையினர் சுடலைமுத்துவை துாத்துக்குடியில் கைது செய்தனர்.