ADDED : மார் 11, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஏ.டி.டி., 57 மற்றும் 58 ரக ஆதார நெல் விதைப் பண்ணைகளை விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத் துறை இணை இயக்குநர் தபேந்திரன் ஆய்வு செய்தார்.
கலப்பு நெல் ரகங்களை வயலில் இருந்து அகற்றி இனத்துாய்மையை பாதுகாக்க அறிவுரை கூறினார்.
தொடர்ந்து ஏ.டி.டி., 37 ரக நெல் சுத்திகரிப்பு பணியையும், உலகனேரியில் அமைந்துள்ள தனியார் அங்கக காய்கறி பண்ணையையும் பார்வையிட்டார்.
விதை விற்பனை நிலையங்களில் நெல், காய்கறி விதைகள், பூச்சி மருந்துகளை ஒரே குடோவுனில் வைத்திருந்ததை கண்ட அவர் ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 3494 கிலோ விதைகளை விற்பனை செய்ய தடை விதித்தார். விதை ஆய்வு துணை இயக்குநர் வாசுகி, விதைச் சான்று உதவி இயக்குநர் சிங்காலீனா, அலுவலர் மகாலட்சுமி உடனிருந்தனர்.