/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ் படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்த போலீஸ் மீது தாக்குதல்
/
பஸ் படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்த போலீஸ் மீது தாக்குதல்
பஸ் படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்த போலீஸ் மீது தாக்குதல்
பஸ் படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்த போலீஸ் மீது தாக்குதல்
ADDED : ஆக 11, 2024 05:50 AM
திருமங்கலம், : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பஸ் படிக்கட்டில் பயணித்த மாணவர்களை கண்டித்த போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
திருமங்கலம் கற்பகநகர் அழகர்சாமி 44. பெருங்குடி போலீஸ் ஏட்டு. நேற்று முன் தினம் மாலை திருமங்கலத்திலிருந்து விமான நிலைய ரோடு வழியாக ஓ.ஆலங்குளத்திற்கு சென்ற டவுன் பஸ்சில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர். அப்போது டூவீலரில் வந்த அழகர்சாமி, பஸ்சை நிறுத்தி படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்து உள்ளே போகுமாறு கூறினார். மாணவர்கள் உள்ளே சென்றபின் பஸ் கிளம்பியது. இந்நிலையில் போலீஸ்காரர் தங்களை திட்டியதாக மாணவர் ஒருவர் தனது அப்பா ராமரிடம் தெரிவித்தார். ஆத்திரமுற்ற ராமர், மகனுடன் கற்பக நகர் பகுதிக்கு வந்தார்.
மாணவர் அடையாளம் காட்ட டூவீலரில் வந்த அழகர்சாமி மீது தனது டூவீலரால் வேகமாக மோதி கீழே தள்ளி ராமர் கொல்ல முயற்சித்தார்.
காயமுற்ற ஏட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.