ADDED : செப் 06, 2024 05:12 AM
பாலமேடு: பெரியஊர்சேரி அதிவீரபாண்டியன் 48. வி.சி.க., மேற்கு மாவட்ட அமைப்பாளர். இவரது முகநுாலில்மகளிர் மாநாடு உள்ளிட்டகட்சி பணிகளில் இவர் சார்ந்த மேற்கு மாவட்டத்தை விட கிழக்கு மாவட்ட செயலாளர்சிறப்பாக செயல்படுவதாகவிமர்சித்து பதிவிட்டுஉள்ளார்.
இதற்கு எதிராக தொகுதி இளம் சிறுத்தைகள் பாசறை செயலாளர் முடுவார்பட்டி மணிமொழியன் 46, கருத்து பதிவிட வாக்குவாதமானது. நேற்று முன்தினம் இரவு பாலமேடு அருகே சுக்காம்பட்டி கிராம மந்தைக்கு மனிமொழியனை பேச அழைத்து மது போதையில் இரும்பு கம்பி, கட்டையால் தாக்கி காயப்படுத்தினர். மதுரை அரசு மருத்துவமனையில் மணிமொழியன் சிகிச்சை பெறுகிறார்.
பாலமேடு போலீசார்அதிவீரபாண்டியன், ஒன்றிய அமைப்பாளர்தமிழ்குமரன் 38, மாணவரணி அமைப்பாளர் பதினெட்டாம்படியை 42, கைது செய்தனர். தப்பிய நிர்வாகிகள் பரமசிவம், ராஜாராமை தேடி வருகின்றனர்.