ADDED : ஆக 27, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷன் வாகன காப்பகத்தில் நீண்ட காலமாக நிற்கும் இரு சக்கர வாகனங்களை ஏலம் விட ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு, மேற்கு நுழைவாயில்களில் இருசக்கர வாகன காப்பகங்கள் உள்ளன. இங்கு பயணிகள் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்துகின்றனர். ரயில் பயணம் முடிந்து திரும்பும் போது இரு சக்கர வாகனங்களை எடுத்துச் செல்வர். கடந்த ஓராண்டாக இந்தக் காப்பகத்தில் 31 இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாமல் உள்ளன. அவை கட்டணம் இன்றி இடத்தை அடைத்துக் கொள்வதால், பயணிகள், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே கேட்பாரற்ற இந்த வாகனங்களை ரயில்வே துறை பொது ஏலத்தில் விட தீர்மானித்துள்ளது.