ADDED : ஜூலை 29, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் மாநில தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு கல்விச்செம்மல் விருது வழங்கும் விழா நடந்தது.
தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இந்திய வழக்கறிஞர் சங்க மாநில தலைவர் சாமிதுரை முன்னிலை வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் விருது வழங்கி பேசினார். விழாவில் வழக்கறிஞர் மூவேந்தன், மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன், செயலாளர் முத்துராமலிங்கம் பங்கேற்றனர்.