நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லுாரியில் மகளிர் மையம் சார்பில் உலகத் தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சாந்திதேவி தலைமை வகித்தார். துணை முதல்வர் சுப்புலட்சுமி, உதவிப் பேராசிரியர் இந்துராணி முன்னிலை வகித்தனர்.
தாய்ப்பாலின் சிறப்பினை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை தமிழ்ச் சங்கம் சாலை வழியாக பேச்சியம்மன் படித்துறை வரை சென்று மீண்டும் கல்லுாரியில் நிறைவடைந்தது.