நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தேசிய மாணவர் படை, மதுரை 7 வது பட்டாலியன் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், தலைவர் ராஜகோபால், துணைத் தலைவர் ஜெயராம், உதவித் தலைவர் ராஜேந்திரபாபு, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி கீர்த்தனா வரவேற்றார்.
மதுரை 7வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் சிவக்குமார், கல்லுாரி தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பேசினார். மாணவர் பூபதி நன்றி கூறினார். என்.சி.சி., அலுவலர் சுரேஷ்பாபு ஏற்பாடுகளை செய்திருந்தார்.