ADDED : ஜூன் 19, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
எழுமலை: எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி செலீனால் பாய் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஆசிரியர் முருகேசன் வரவேற்றார். எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, எஸ்.ஐ., கேசவன் மற்றும் போலீசார் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கினர். கல்வி கற்கும் பருவத்தில் இது போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்கவும், கிராமப்பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டனர். ஆசிரியர் சிவக்குமார் ஒருங்கிணைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
