ADDED : ஆக 20, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மதுரையில் ஆக.23 முதல் 28 வரை நடக்கும் மாநாடு குறித்து மேலுாரில் எல்.ஐ.சி., ஊழியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். வரவேற்பு குழு செயலாளர் வடிவேல் முருகன் தலைமை வகித்தார்.
கோட்ட சங்கத் தலைவர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். வளர்ச்சி அதிகாரி சரவணகுமார், முகவர்கள் ஜெகநாதன், கேசவன் உள்ளிட்டோர் எல்.ஐ.சி., பிரீமியம் மீதான ஜி.எஸ்.டி.,யை திரும்ப பெற வேண்டும். சிறப்பு வரி விலக்குகளை அளிக்க வேண்டும் என பேசினர். சுடர் கலைகுழுவினர் தப்பாட்டம், வீதிநாடகம், பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சி.ஐ.டி.யு., தாலுகா தலைவர் மணவாளன் நன்றி கூறினார்.

