ADDED : ஜூலை 21, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: சீமானுாத்தில் புனித வளனார் சமூக பணி மையம் சார்பில் மனித கடத்தல் தடுப்பு, மனித நேயம் காத்திடுவோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் திட்ட இயக்குநர் லுாசியா தலைமையில் நடந்தது.
ஷோபனா அஜித்பாண்டி துவக்கி வைத்தார். உசிலம்பட்டி மகளிர் ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் லீலாவதி, சாந்தி, நகர் எஸ்.ஐ.,க்கள் ராம கிருஷ்ணன், மகேந்திரன், குழந்தை இயேசு சர்ச் பாதிரியார் இக்னேசியஸ் ஸ்டாலின், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.