ADDED : ஆக 13, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் போலீஸ் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தின ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
உதவி கமிஷனர் குருசாமி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பேனர்களை மாணவர்கள் எடுத்துச் சென்றனர். திருப்பரங்குன்றம் நுழைவாயிலில் துவங்கிய ஊர்வலம், 16கால் மண்டபம் முன்பு நிறைவடைந்தது. தாசில்தார் கவிதா தலைமையில் போதை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்தனர்.