ADDED : ஆக 29, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் சைபர் கிரைம் போலீசார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
ஏ.டி.எஸ்.பி., கருப்பையா, டி.எஸ்.பி., செந்தில்குமார், முதல்வர் ஜோதிராஜன், சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். அலைபேசி செயலிகள், கோப்புகளை பதிவிறக்கம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் குறைந்த விலையில் பொருட்கள் தருவதாக கூறினால் நம்பக்கூடாது. சைபர் குற்ற உதவிக்கு 1930 ல் புகார் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.