ADDED : ஜூலை 15, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மண்டல தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் துாய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் மேலக்கால் ரோடு கொடிமங்கலம் பகுதியில் நடந்தது.
மண்டல இயக்குநர் சந்தோஷ் துவக்கி வைத்து, துாய்மை இந்தியா இயக்கத்தின் அவசியம், சுற்றுசூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார். உதவி இயக்குநர் பழனியப்பன் வரவேற்றார். கொடிமங்கலம் அரசபள்ளி தலைமை ஆசிரியர் நித்யகல்யாணி முன்னிலை வகித்தார். புள்ளியியல் அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
