ADDED : ஜூலை 15, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மைய முடிவின்படி கூடுதல் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் நிலையிலான பதவி உயர்வுகளை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பொருளாளர் அமுதரசன் முன்னிலை வகித்தார். குருசங்கர் நன்றி கூறினார்.
