ADDED : மே 10, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: பாலமேட்டில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு வாழை மரங்கள் சாய்ந்தன.
நேற்று முன்தினம் அலங்காநல்லுார், சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பாலமேடு பகுதியில் சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதில் அ.கோவில்பட்டி, வைகாசிபட்டி, எர்ரம்பட்டி பகுதிகளில் பல ஏக்கர் வாழை மரங்கள் வாழை தாருடன் ஒடிந்தன.
கதிர் விட்டு பால் பிடிக்கும் பருவத்தில் இருந்த மக்காச்சோளமும் ஏக்கர் கணக்கில் சாய்ந்தன. கிணற்று பாசனத்தில் விளைச்சல், அறுவடை நேரத்தில் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.