ADDED : ஜூலை 26, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கப்பலுாரில் விதிமீறி அமைக்கப்பட்ட டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும், டோல்கேட்டை அகற்றவும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாலை டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினரிடம் திருமங்கலம் டி.எஸ்.பி., அருள் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படவில்லை. இன்று(ஜூலை 26) ஆர்.டி.ஓ., சாந்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
எத்தனை பேச்சுவார்த்தை நடத்தினாலும் டோல்கேட்டை இடமாற்றம் செய்வதே எங்கள் நோக்கம். அதனால் திட்டமிட்டபடி ஜூலை 30ல் பந்த் மற்றும் டோல்கேட் முற்றுகை போராட்டம் நடைபெறும் என ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்தனர்.