ADDED : மே 28, 2024 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (பி.எப்., ஆபீஸ்) சார்பில் பழங்காநத்தம் இ.எஸ்.ஐ.சி., அலுவலகத்தில் 'வைப்பு நிதி உங்கள் அருகில்' என்ற திட்டத்தின் மூலம் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.
தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஓய்வூதியதாரர்கள் அளித்த மனுக்களை மதுரை பி.எப்., கணக்கு அதிகாரி ரமண கேசஹா தலைமையில் அலுவலர்கள் சரோஜா, கணேசன், மேலாளர் சரவணன் ஆகியோர் பரிசீலித்து கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டனர்.
பிரயாஸ் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஆவின் பாலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நால்வருக்கு ஓய்வு நாளிலேயே ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டது.