/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாரதி கவிதைகள் வெற்றியை தரும்; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசு்சு
/
பாரதி கவிதைகள் வெற்றியை தரும்; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசு்சு
பாரதி கவிதைகள் வெற்றியை தரும்; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசு்சு
பாரதி கவிதைகள் வெற்றியை தரும்; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசு்சு
ADDED : ஜூலை 28, 2024 06:07 AM
பேரையூர் : டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் 84வது ஆண்டு விழா நடந்தது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசியதாவது:
பாரதியின் கவிதைகள் மாணவர்களுக்கு வாழ்வில் வெற்றியைத் தரும். பாரதி கவிதைகளை இசையுடன் மாணவர்கள் கற்க பள்ளிகள் உதவ வேண்டும்.
விடுதலை இயக்கத்தின் போது பாரதியின் கவிதைகள் மக்களுக்கு செய்தியை கொண்டு சென்றன. சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு பாரதியார் கவிதைகளை காட்சிப்படுத்தி இசையுடன் கொண்டு செல்ல வேண்டும்.
பாரதி பாடல்கள் பரவிட நாட்டுப்புற கலைகள் பெரிதும் உதவும் என்றார்.
பாரதியாரின் கவிதைகளை இசை, நாடகம், நாட்டிய நிகழ்ச்சிகளாக மாணவர்கள் நடத்தினர். மாவட்ட நீதிபதி ஹரிஹரகுமார் பங்கேற்றார். பள்ளிச் செயலாளர் கீதா நன்றி கூறினார்.