ADDED : ஜூலை 11, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
நாகமலை: நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா போட்டிகள் பள்ளித் தலைவர் தர்மராஜ் தலைமையில் தொடங்கின.
தலைமையாசிரியர் ரவிக்குமார் வரவேற்றார். செயலாளர் ஆனந்த கிருஷ்ணன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சோமசுந்தரம், பொருளாளர் பாலாஜி, விடுதிச் செயலாளர் குமார் ஆகியோர் பேசினர். மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியம், கவிதை, பேச்சுப் போட்டிகள், நாடகம், நாட்டுபுறக் கலையில் காமராஜர் குழு நடனம், வண்ணக்கோலப் போட்டிகள் நடைபெற்றன. 34 பள்ளிகளிலிருந்து 922 மாணவர்கள் பங்கேற்றனர்.
