அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் கேட்டுக் கடையில் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மண்டல தலைவர் இருளப்பன் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி, மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர் சித்ராதேவி முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சிவகுரு, விக்னேஸ்வரன், பாலமுருகன், கார்த்தி, அமராவதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி: மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள், நகர் தலைவர் பிரசாத்கண்ணன், மூத்த நிர்வாகி வனராஜா, கூட்டுறவு பிரிவு நிர்வாகிகள் தீபன்முத்தையா, சவுந்தரபாண்டியன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவி ரெஜினாமேரி, வர்த்தகபிரிவு மாவட்ட பாபுராஜன், இளைஞரணி மனோகணேசன், நகர் மகளிரணி தலைவி கவுசல்யா, மண்டல நிர்வாகிகள் தினகரன், மயில்ராஜ், தவசீலா, சிவமுருகன், தெற்கு மண்டல தலைவர் கருப்பையா, வடக்கு மண்டல பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.