ADDED : மார் 25, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : விருதுநகர் லோக்சபா தொகுதியின் பா.ஜ., வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமார் நேற்று கப்பலுார் பா.ஜ., மதுரை மேற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்தனர்.
தலைவர் சசிகுமார் வரவேற்றார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், விருதுநகர் தொகுதி பொறுப்பாளர் வெற்றிவேல், இணை அமைப்பாளர் கஜேந்திரன், திருமங்கலம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சக்திவேல், பார்வையாளர் ராஜரத்தினம், பொதுச் செயலாளர்கள் சிவலிங்கம், பாரதிராஜா, துணைத் தலைவர் சரவணன், செயலாளர்கள் ஜெயக்குமார், தமிழ்மணி, சின்னசாமி, ஆன்மிகப் பிரிவு துணைத் தலைவர் லெனின் அண்ணாமலை, ஒன்றிய தலைவர்கள் அழகுமலை, சரவணன், கிருஷ்ணன், நகர் தலைவர் விஜயேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

