ADDED : ஜூன் 26, 2026 04:53 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: -மேலக்காலில் பா.ஜ., சார்பில் அவசரநிலை பிரகடன நாளை அரசியல் அமைப்பு படுகொலை நாளாக அனுசரித்து கருத்தரங்கு நடந்தது.
கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி, செயலாளர் கதலிநரசிங்கப் பெருமாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மண்டல் தலைவர் முத்துப்பாண்டி நன்றி கூறினார். நிர்வாகிகள் பழனிவேல்சாமி, இன்பராணி, மூவேந்திரன், மஞ்சுளா உட்பட பலர் பங்கேற்றனர்.
