/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
358 ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ., முதலிடம் மதுரை தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு
/
358 ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ., முதலிடம் மதுரை தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு
358 ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ., முதலிடம் மதுரை தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு
358 ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ., முதலிடம் மதுரை தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 27, 2024 05:50 AM
மதுரை : லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் 358 ஓட்டுச்சாவடிகளில் பா.ஜ., முதலிடம் பெற்றதால், ஆய்வுக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாநில அளவில் எல்லா தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை தொகுதிக்கான பொறுப்பாளராக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை தொகுதி நிர்வாகிகளை சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள், மாநில பொதுசெயலாளர் ராமசீனிவாசன், மதுரை நகர் தலைவர் மகாசுசீந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மாநில மீனவர் அணி துணைத் தலைவர் சிவபிரபாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர் கே.பி.ராமலிங்கம் கூறியதாவது: மதுரை லோக்சபா தொகுதியில் பா.ஜ., 2வது இடம் பெற்றுள்ளது. எதிர்பாராத வகையில் 328 ஓட்டுச் சாவடிகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. மதுரை அ.தி.மு.க., கோட்டை என்பதை தாண்டி, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என கட்சி எடுத்த முடிவுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் இந்த வெற்றியை பன்மடங்கு ஆக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் எல்லா ஊராட்சி வார்டுகளில்கூட போட்டியிடும் அளவு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அது சட்டசபை தேர்தலுக்கு அடித்தளமாக அமையும். நடந்து முடிந்த தேர்தலில் பிரச்னைகள் இருந்தால் அது ஓட்டு எண்ணிக்கையோடு முடிந்துவிட்டது. அதை எப்படி சரிசெய்வது என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.