/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிருப்தி தொண்டர்களுக்கு பா.ஜ., எச்சரிக்கை
/
அதிருப்தி தொண்டர்களுக்கு பா.ஜ., எச்சரிக்கை
ADDED : மே 25, 2024 03:55 AM
மதுரை : மதுரை நகரில் அதிருப்தி தொண்டர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை தடுக்க பா.ஜ., நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை பா.ஜ.,வில் பொறுப்பு வகிப்போரில் விபத்து, இறப்பு போன்ற காரணங்களால் பாதிக்கப்படுவோர் குடும்பத்திற்கு பல ஆண்டுகளாக நிதி உட்பட தேவையானஉதவிகளை செய்கின்றனர்.
இதுகுறித்து கட்சியினர் சிலர் சந்தேகம் எழுப்பினர். இதற்கு பதில் அளித்துள்ள நகர் பா.ஜ., 'ஆவணங்கள் தயாராக வைத்துள்ளோம். கட்சி மீது தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பின் தலைமை மூலமே விசாரிக்க வேண்டும். சுயவிளம்பரம், கோஷ்டி அரசியலுக்காக கட்சியை பிளவுபடுத்த நினைப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டது. நகர் தலைவர் மகாசுசீந்திரன் கூறியதாவது: விபத்து, இறப்பு என பாதிக்கப்படும் கட்சியினர் குடும்பத்திற்கு நிதிவசூலித்து உதவி செய்கிறோம். கீரைத்துறையில் இறந்த ஒரு நிர்வாகியின் குடும்பம், கள்ளிக்குடியில் மண்டல் நிர்வாகி ஒருவர் குடும்பம் உட்பட பலருக்கு உதவியுள்ளோம். சமீபத்தில் பழங்காநத்தம் நிர்வாகி ஒருவர் குடும்பத்திற்கு உதவ ஏற்பாடு செய்து, அவர்களின் தேவையை அறிவதில் சிலநாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் அக்குடும்பத்திற்கு நிதி வழங்கிய நிர்வாகி ஒருவர், கட்சி உதவவில்லை என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். இதனால் எதிர்க்கட்சியினரும் அதனை விமர்சிக்க துவங்கினர். நிர்வாகிகள் குறைகளை தலைமையிடம் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, தன்னிச்சையாக செயல்படக் கூடாது. எனவே அக்கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

