/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ.,வின் வாழ்நாள் அடிமை தி.மு.க., : உதயகுமார் கிண்டல்
/
பா.ஜ.,வின் வாழ்நாள் அடிமை தி.மு.க., : உதயகுமார் கிண்டல்
பா.ஜ.,வின் வாழ்நாள் அடிமை தி.மு.க., : உதயகுமார் கிண்டல்
பா.ஜ.,வின் வாழ்நாள் அடிமை தி.மு.க., : உதயகுமார் கிண்டல்
ADDED : ஆக 20, 2024 01:07 AM
பேரையூர் : ''தி.மு.க., பா.ஜ.,வின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பா.ஜ., வாழ்நாள் அடிமையாக தி.மு.க., மாறிவிட்டது'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
பேரையூர் அருகே தேவன்குறிச்சியில் டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழகம் சார்பில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உதயகுமார் பேசியதாவது: கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்கள். அந்த விழாவிற்கு மத்திய அமைச்சர், அண்ணாமலை வருகிறார்கள். 'என் அப்பாவுக்கு நாணயத்தை வெளியிட அமைச்சர் உள்ளே வாருங்கள்; மத்திய அரசே உள்ளே வாருங்கள்' என்று ஸ்டாலின் அழைக்கிறார்.
ஆனால் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு ஒரு காசு கூட தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை என கேட்கவில்லை. நாணயத்தை மட்டும் வெளியிட அழைக்கவில்லை. ஏனென்றால் தனது மகன் உதயநிதியை முதல்வராக வேண்டும். அதற்கு எந்த எதிர்ப்பும் வழக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காகதான் ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்துள்ளார் ஸ்டாலின். இவ்வாறு பேசினார்.
திருப்பரங்குன்றம்
கைத்தறி நகரில் அ.திமு.க., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசியதாவது: பா.ஜ., என்ற முதலை விழுங்கி விடக்கூடாது என்பதற்காகவே அ.தி.மு.க, தனித்து நிற்கிறது. தமிழகமெங்கும் கருணாநிதியின் சிலையை திறந்தது மட்டுமே தி.மு.க., அரசின் சாதனை. மதுரை நுாலகத்திற்கு செலவழித்த ரூ. 150 கோடியை மக்கள் திட்டங்களுக்கு செயல்படுத்தி இருக்கலாம் என்றார்.