நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை தானம் அறக்கட்டளை, சுகம் அறக்கட்டளை, எச்.சி.எல்., நிறுவனம் சார்பில் எல்காட்டில் உள்ள எச்.சி.எல்., டெக்னாலஜீஸ் தலைமை அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
218 பேர் பதிவு செய்த நிலையில் 178 பேரிடம் இருந்து ரத்ததானம் பெறப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது. மருத்துவ குழுவினர், பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.