ADDED : ஜூலை 26, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் அயோத்திதாசர், அம்பேத்கர் வாசகர் வட்டம், வணங்காமுடி, பண்டிதர் பதிப்பகங்கள் ஒருங்கிணைப்பில் நுால் வெளியீட்டு விழா நடந்தது. அ.தமிழ்முரசு தலைமை வகித்தார். தமிழ்க்கனி முன்னிலை வகித்தார். முத்துபிரதீபன், சாக்யா வரவேற்றனர்.
நுாலை மக்கள் தேசம் கட்சித் தலைவர் ஆசைத்தம்பி, எழுத்தாளர் அருள்முத்துக்குமரன் எழுதிய, ‘உள்ஒதுக்கீட்டில் ஒளிந்திருக்கும் சமூகஅநீதி’ நுாலை வெளியிட பேராசிரியர் கதிரவன், வேந்தன் பெற்றனர். நா.த.க., நிர்வாகி ஜெயசீலன், பேராசிரியர் லட்சுமணன், மனித உரிமை செயல்பாட்டாளர் ஆறுமுகன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் உள்ஒதுக்கீட்டை மறுசீரமைப்பு செய்வதுடன், ரோஸ்டர் முறையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
