ADDED : ஜூலை 25, 2026 10:35 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஜூலை 26 – திருமங்கலம் அருகே சென்னம்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 26.
இவர், திண்டுக்கல்லிலிருந்து பாலக்காடு – திருச்செந்துார் ரயிலில் நேற்று காலை 11:20 மணிக்கு மதுரை வந்தார். அவரது உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனையிட்டனர். 30 வெடிகள் கொண்ட 2 பட்டாசு பொட்டலங்கள் இருந்த அட்டை பெட்டியை பறிமுதல் செய்தனர். கிராம திருவிழாவிற்காக கொண்டு சென்றதாக தெரிவித்தார். போலீசார் கைது செய்தனர்.
