ADDED : ஜூன் 05, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் தீபா வரவேற்றார். எம்.எல்.ஏ., கருப்பையா பொதுத்தேர்தவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு,கல்வி உபகரணங்களை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பி.டி.ஏ., தலைவர் பாண்டிச்செல்வி, எஸ்.எம்.சி., தலைவர் சுந்தரவல்லி கலந்து கொண்டனர். ஆசிரியை கிரேஸ் பாக்கியமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். உதவிதலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.
மேலக்கால் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி விழாவில் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி வரவேற்றார். சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எம்.எல்.ஏ., கருப்பையா மரக்கன்றுகளை நட்டு மாணவர்களுக்கு பரிசு,கல்வி உபகரணங்களை வழங்கினார். ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.
