ADDED : ஜூன் 05, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே நாட்டாமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமை வகித்தார்.
சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை தொண்டிமுத்து வரவேற்றார். மதுரை ரோட்டரி தமிழ்ச்சங்க நிர்வாகிகள் பாலகுரு, பிரேம், ஜெகன், உசிலம்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், சேகர், பெரியாறு வைகை பாசன சங்க நிர்வாகி ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் சிட்டிபாபு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கினார். ஆசிரியர் சத்யன் நன்றி கூறினார்.
