/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வரை பார்க்க கொடைக்கானல் சென்ற கிளை செயலாளர் பலி
/
முதல்வரை பார்க்க கொடைக்கானல் சென்ற கிளை செயலாளர் பலி
முதல்வரை பார்க்க கொடைக்கானல் சென்ற கிளை செயலாளர் பலி
முதல்வரை பார்க்க கொடைக்கானல் சென்ற கிளை செயலாளர் பலி
ADDED : மே 02, 2024 02:27 AM
தேவதானப்பட்டி:மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலினை பார்ப்பதற்காக டூவீலரில் சென்ற தி.மு.க., கிளை செயலாளர் பழனிக்குமார், டம்டம் பாறை வளைவில் நிலைதவறி சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுரை மாவட்டம் சக்குடி, அனஞ்சியூர் தி.மு.க., கிளை செயலாளர் பழனிக்குமார் 45. மதுரை மாநகராட்சி தற்காலிக லாரி டிரைவராக இருந்தார். கொடைக்கானலில் தங்கியுள்ள முதல்வர் ஸ்டாலினை பார்ப்பதற்கு நண்பர் சரவணக்குமாருடன் 45, டூவீலரில் சென்றனர்.
பைக்கை பழனிக்குமார் ஓட்டினார். கொடைக்கானல் ரோடு டம்டம்பாறை அருகே வளைவில் நிலைதடுமாறி விழுந்ததில் பழனிக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் உட்கார்ந்து வந்த சரவணக்குமார் காயம் இன்றி தப்பினார்.
பழனிக்குமாருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். பழனிக்குமார் உடல் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் விசாரிக்கிறார்.--

