நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடந்தது.
சர்வ சமய பாடல் இசைக்கப்பட்டு குர்ஆன் ஓதப்பட்டது. காப்பாட்சியர் நடராஜன் வரவேற்றார். செயலாளர் நந்தா ராவ் தலைமை வகித்தார். ரம்ஜான் நோன்பு நடைமுறை குறித்து காட்சிக் கூட வழிகாட்டி சபுராபீபி பேசினார். மியூசிய பணியாளர்கள், சர்வோதயா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

