ADDED : ஆக 06, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்டார குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா கருத்தரங்கு நடந்தது.
திட்ட அலுவலர் மகேஷ் பிரியா தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் பூர்ணிமா முன்னிலையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. சுகாதார செவிலியர் காந்தியம்மா, செவிலியர் ஜான்சி ராணி மேற்பார்வையாளர் முத்துராக்கு மற்றும் ராணி, அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் உறுதிமொழி ஏற்றனர்.
