ADDED : ஆக 06, 2026 06:11 PM
கோயில்
* ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு மஹா அபிஷேகம்: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 10:00 மணி, தீபாராதனை, மதியம் 12:00 மணி, கும்பாபிஷேக மண்டல பூஜை, காலை 8:00 மணி.
* ஆடி உற்ஸவம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு, மதுரை, கணபதி ஹோமம், காலை 6:05 மணி, பூக்குழி வளர்ப்பு, காலை 10:00 மணி, சக்தி கரகம், பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், மதியம் 3:00 மணி, முளைப்பாரி ஊர்வலம், இரவு 9:00 மணி.
* கிருத்திகை சிறப்பு பூஜை: சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, காலை 9:30 மணி.
* கோயில் உற்ஸவம்: வனபத்திர காளியம்மன் கோயில், முரட்டன்பத்திரி, மதுரை, பால்குடம் எடுத்தல், காலை 6:00 மணி, விளக்கு பூஜை, மாலை 4:00 மணி, சக்தி கரகம் எடுத்தல், இரவு 8:00 மணி.
* ஆண்டு திருவிழா: செல்வ விநாயகர், முத்துமாரியம்மன் கோயில், 60 அடி ரோடு, செல்லுார், மதுரை, பால்குடம், கரகம் எடுத்தல், காலை 8:00 மணி.
ஆடி வெள்ளி
* மீனாட்சி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: மீனாட்சி சொக்கநாதர் கோயில், கோச்சடை, மதுரை, காலை 9:00 மணி.
* அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, காலை 10:00 மணி.
* துர்க்கை, தேவி கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 11:30 மணி.
* அம்மனுக்கு சிறப்பு பூஜை, கூழ் ஊற்றுதல்: முத்துமாரியம்மன் கோயில், காமாட்சி நகர், விளாங்குடி, மாலை 6:00 மணி.
* சுவாமிக்கு குதிரை வாகன அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.
* விளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* திருக்குறள்: நிகழ்த்துபவர் – சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* முருகன் திருவருள்: நிகழ்த்துபவர் – ராதாகிருஷ்ணன், சுந்தரநாட்டாமை ஸ்ரீலக் ஷனா திருமண மண்டபம், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி.
* அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் – பாதே ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
* பிழையில்லாமல் எழுதுவோம் – பயிலரங்கம்: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்பமுரளி, சிறப்பு விருந்தினர்: சிவகங்கை சோழபுரம் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலயம் பள்ளி தமிழாசிரியர் கதிரவன், ஏற்பாடு: பைந்தமிழ் இலக்கிய பேரவை, காலை 10:30 மணி.
* க்யூரியோபெஸ்ட் 2026 – மாணவர்களின் புதுமையான திட்டங்கள், ஏ.ஐ., உள்ளிட்ட வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் குறித்து கண்காட்சி: அல்ட்ரா பொறியியல் கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் மணிமாறன், காலை 9:30 மணி.
* 21ம் நுாற்றாண்டில் ஆங்கில ஆய்வுகள் – நுால்கள், தொழில்நுட்பங்கள், மாற்றங்கள் குறித்து சர்வதேச மாநாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் பாலமுருகன், சிறப்பு விருந்தினர்: உஸ்பெகிஸ்தான் ஜே.டி.பி., பல்கலை உதவி பேராசிரியர் நேரு, காலை 9:00 மணி.
* தமிழ் இலக்கியமும் கண்ணதாசனும் – கண்ணதாசன் நுாற்றாண்டு விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் கல்லுாரி இணைப் பேராசிரியர் கற்பகம், ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், காலை 11:00 மணி.
பொது
* அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவை போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்: மேற்கு தாலுகா அலுவலகம், விராட்டிபத்து, மதுரை, தலைமை: மாநில உதவித் தலைவர் தவமணி, தொடங்கி வைப்பவர்: மார்க்சிஸ்ட் திருப்பரங்குன்றம் செயலாளர் ஜெயக்குமார், ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காலை 10:00 மணி.
* சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், அருட்செய்தி: ஸ்ரீவில்லிப்புத்துார் இயற்கை விவசாயி ராஜ்குமார், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.
மருத்துவம்
* ரத்த தான முகாம்: அரசு மேல்நிலைப்பள்ளி, சேடபட்டி, ஏற்பாடு: நாட்டு நலப்பணி திட்டம், உயிர் ரத்ததான இயக்கம், எழுமலை மற்றும் சேடபட்டி ஆராம்ப சுகாதார நிலையங்கள், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
* முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை, விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
கண்காட்சி
* சிட்கான் – வர்த்தக கண்காட்சி: அருணாச்சலம் கமலாம்பாள் அரங்கம், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.
* தி இன்டர்நேஷனல் ஒலிம்பியன் சர்க்கஸ்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 11:00 மணி, மதியம் 2:00 மணி, மாலை 4:30 மணி, இரவு 7:30 மணி.
