ADDED : ஆக 06, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: போத்தம்பட்டி கண்மாய் உசிலம்பட்டி- – பேரையூர் ரோட்டில் உள்ளது. கோழிக்கழிவு, வீடுகளின் உபயோகமற்ற பொருட்களை கரையோரத்தில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதை கட்டுப்படுத்தவும், கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியிலும் சில நாட்களாக 58 கிராம கால்வாய் பாசன சங்க விவசாயிகள், போத்தம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவில் சீரமைப்பு பணிகளை முடித்து விட்டு பணியாளர்கள் வெளியேறிய போது, சிலர் கண்மாய் கரையோரம் மினி லோடு வேனில் இருந்து குப்பையை கரையோரம் கொட்டினர். வாகனத்தை உசிலம்பட்டி தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
