ADDED : செப் 09, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் மருத்துவமனையில் மணமகன் தாலி கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் ராம சுப்பிரமணியன் 40. அமெரிக்காவில் ஐ.டி.,ஊழியராக பணிபுரிகிறார். இவருக்கும் மலேசியாவில் பணிபுரிந்து வரும் அம்ச ரேகா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் நேற்று எஸ்.எஸ்.காலனியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில் மணமகனின் வேஷ்டி அருகில் இருந்த விளக்கில் பட்டுதீ பிடித்தது. அதில், 40 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருவருக்கும் திருமணம் நடந்தது. சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.