ADDED : மார் 22, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் - டி.கல்லுப்பட்டி ரோட்டில் 15 நாட்களுக்கு முன்பு துவரை செடிகள் உலர்த்தப்பட்டன. அவற்றை விவசாயிகள் அப்புறப்படுத்திய பின், கழிவுகளை ரோட்டோரம் விட்டுச் சென்றனர்.
அந்த குவியலில் தற்போது  சிலர் தீவைத்து கொளுத்துகின்றனர். இவை எரியும்போது ரோட்டோர மரங்கள் கருகுகின்றன. ஓடையில் கிடக்கும் பாலிதீன் கழிவுகளும் சேர்ந்து எரிவதால்,
அதிலிருந்து கிளம்பும் புகை மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
புகை மண்டலம் கிளம்புவதால் முன்னால் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு புலப்படாத வகையில் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

