ADDED : மார் 09, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் சந்தைப்பேட்டை 6வது வார்டில் 6 மாதமாக குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.
இதை கண்டித்து திருச்சி ரோட்டில் அரைமணி நேரம் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. எஸ்.ஐ., ஜெயக்குமார், நகராட்சி அலுவலர்கள் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.