ADDED : மே 14, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒத்தக்கடை : மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து செங்கோட்டைக்கு நேற்று காலை அரசு பஸ் புறப்பட்டது. ரிங்ரோட்டில் பாண்டிகோயில் அருகே சென்றபோது, டூவீலரில் சென்ற நபர் பஸ்சின் குறுக்கே வேகமாக கடந்துள்ளார்.
அவர் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் சடன்பிரேக் போட்டுள்ளார்.
திடீரென பஸ் நின்றதால் பின்னால் வந்த சிவகாசி செல்லும் தனி யார் பஸ், திருச்செந்துார் செல்லும் அரசு பஸ் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இதில் அரசு பஸ்சின் கண்ணாடிகளும், நடுவில் மாட்டிக்கொண்ட தனியார் பஸ்சின் முன், பின் பகுதிகள் பலத்த சேதமடைந்தன.
விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
திடீர் விபத்தால் இப்பகுதியில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதித்தது. மாட்டுத்தாவணி போலீசார் விசாரிக்கின்றனர்.

