ADDED : ஜூலை 23, 2026 05:22 PM
மேலுார்: மேலுார் வழியாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. தினமும் நுாற்றுக்கணக்கானோர் இங்கிருந்து பயணிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு போலீசார் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஆனால் பெரும்பாலான பஸ்கள் செல்வதில்லை.
பயணிகள் கூறியதாவது: டெப்போவில் புகார் தெரிவித்தால் ஓரிரு பஸ்கள் மட்டுமே உள்ளே வருகின்றன. அதனால் பயணிகள் ‘உள்ளே, வெளியே’ என அலைகழிக்கப்படுவதோடு குறித்த நேரத்தில் கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். பஸ் ஸ்டாண்ட் முன்பு நடுரோட்டில் பஸ் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பதோடு விபத்து அபாயமும் ஏற்படுகிறது என்றனர்.
டி.எஸ்.பி., சிவக்குமார் கூறுகையில்,அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
