தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்தில் ரயிலை மறித்த மாணவர்கள்

குன்றத்தில் ரயிலை மறித்த மாணவர்கள்

குன்றத்தில் ரயிலை மறித்த மாணவர்கள்


ADDED : ஜூலை 23, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். வினாத்தாள் வெளியானது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மதுரையிலும் இருநாட்களாக மாணவர் அமைப்புகள் போராடி வருகின்றன. நேற்று காலை 11:30 மணிக்கு திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் தடுத்தும் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை – திருச்செந்துார் ரயிலை மறித்தனர். தண்டவாளத்தில் படுத்துக்கொண்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. 24 மாணவர்கள், 12 மாணவியர் கைது செய்யப்பட்டனர். மதுரை அரசு சட்டக்கல்லுாரி மாணவர்களும் கல்லுாரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us