நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பெரியரத வீதி சிக்கந்தர் தர்ஹா பள்ளிவாசலில் மதியம் தொழுகை முடித்து வருபவர்களுக்கு அன்னை பாத்திமா இஸ்லாமிய மகளிர் மேம்பாட்டு குழு சார்பில் ஆரஞ்சு, எலுமிச்சை, மா, திராட்சை பழங்கள், பழச்சாறு, மோர், சர்பத், வெள்ளரி, இளநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
மேம்பாட்டுக்குழு நிர்வாகிகள் காத்துன்பீவி, பாத்திமாபீவி, உசேனாபீவி, சாகுல்ஹமீது, அக்பர்அலி, தர்ஹா பள்ளிவாசல் நிர்வாகிகள் மேனேஜிங் டிரஸ்டி சீனியர் ஒஜீர்கான், ஆரிப்கான், அக்பர்கான், காதர்பாஷாரபீக், இஸ்மாயில்கான், மகபூப்பாஷா, செய்யது இஸ்மாயில் கலந்து கொண்டனர். கவிஞர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.