பி.எம்.எப்.எம்.இ., திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
பி.எம்.எப்.எம்.இ., திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 22, 2026 06:42 PM
மதுரை: ‘ மத்திய அரசின் பி.எம்.எப்.எம்.இ., திட்டத்தின் கீழ் உணவுசார்ந்த குறு நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்’ என மதுரை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
உணவு சார்ந்த தொழில் வளத்தை பெருக்கும் வகையில் மத்திய அரசின் 60 சதவீதம், மாநில அரசின் 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, வயது வரம்பு, வருமான வரம்பு இல்லை. புதிதாக குறு நிறுவனங்களை துவங்குவோர், விரிவாக்கம் செய்வோருக்கு இத்திட்டம் உதவுகிறது.
தனிநபராக, குறு நிறுவனங்களாக, சுயஉதவிக் குழுக்களாக, உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களாக தொழில் துவங்கலாம். அதிகபட்சமாக திட்ட மதிப்பீடு ரூ.ஒரு கோடி வரை அனுமதி உண்டு. திட்ட மதிப்பில் 35 சதவீதம் என அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். 90 சதவீதம் வங்கிக்கடன் 10 சதவீதம் சுயமுதலீடு செய்ய வேண்டும்.
அரிசி மில், மாவுமில், ஆயில் மில், பேக்கரி தயாரிப்பு, வாசனை திரவியங்கள், மசாலா பொடி தயாரிப்புக்கு ரூ.ஒரு கோடி வரை உபகரணங்கள் வாங்க கடன் உண்டு.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, திட்ட மதிப்பீடு தயாரித்து வங்கிக் கடனுதவிக்கு வழிகாட்ட என மாவட்ட வள அலுவலர்கள் உள்ளனர். தொழில் துவங்குவோர் அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறமுடியும். www.pmfme.mofpi.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார். விவரங்களுக்கு 87787 57549 ல் பேசலாம்.
